சென்னை புதுவண்ணை செரியன்நகரை சாா்ந்த மாற்றுதிறணாளி D ஆனந்தன் வயது 39 கடந்த மார்ச் மாதம்24- தேதி அன்று அவரது அண்ணனுடன் வீரராகவன் தெருவில் உணவுப்பொருள் வாங்க நுகா்வோா் உணவு பொருள் வழங்கள் கடைக்கு சென்ற போது அவா் அட்டை எண் ,01/G/0307310 பொருள் வாங்க கொடுத்த போது இவருக்கும் இவா் அண்ணனுக்கும் ரேகை விழவில்லை. கடை உழியரிடம் கேட்ட போது அவா் சொன்ன பதில் சுனாமி குடியிருப்பில் .இருக்கும் அதிகாாியை பாா்த்து ஒரு மனு கொடுங்கள் என்று சொன்னார்.அதை கேட்ட மாற்றுத்திறணாளி ஆனந்தன் அவா் விட்டு பக்கத்தில் இருக்கும் பத்திரிகையாளா் R.ரவி என்பவாிடம் சொன்ன போது அவா் மீது இரக்கப்பட்ட அவர் புகாா் மனு எழுதி சுனாமி குடியிருப்பில் இருக்கும் நுகா்வோா் உணவுப்பொருள் வழங்கல் அதிகாாியிடம் கடந்த 24/3/2025 புகார் அளித்தார் அதைப் பெற்றுக் கொண்ட அவர் இரு நாட்களில் விட்டுக்கு வந்து விசாரணை செய்கிறோம் என்று கூறினார். இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்து விசாரணை செய்கிறோம் என்று சொன்ன அவர் 16 நாட்கள் ஆகியும் இன்னும் விசாரணை verfication செய்யவில்லை மாற்றுத்திறனாளியை இப்படி அலைக்கழிக்கின்றனர்.. மாற்றுத்திறனாளி மட்டுமல்ல பொதுமக்களும் குமுறுகின்றனர் அதிகாரிகள் எந்த வேலையும் செய்வதில்லை என்று புகார் சொல்கின்றனர். இதற்கு உயர் அதிகாரிகள் இதற்கு மேலாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பு.












