ரோட்டரி மாவட்டம் 3231, மறைமலைநகர் ரோட்டரி சங்கம் மற்றும் மாமண்டூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய யோகா உலக சாதனை நிகழ்வு செங்கல்பட்டு பழவேலி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ராஜன் பாபு பரிந்துரையில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வாரியாக ரொட்டேரியன் முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர். அது மட்டும் இன்றி இந்நிகழ்வில் சமூக முக்கிய பொறுப்பாளர்களும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் யோகா உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களும், கேடயங்களும், சான்றிதழ்களும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர் மாணவியர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் வாழ்த்துரை கூறி மறைமலை நகர் ரோட்டரி மற்றும் மாமண்டூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய செங்கல்பட்டு
ரோட்டரி மாவட்டம் 32 31 இருந்து ஒரு உலக சாதனை படைக்க அனைவரையும் ஒன்றிணைத்து இந்நிகழ்வானது
ரொட்டேரியன் கணேசன் நிகழ்ச்சித் தலைவர்.
மற்றும்
ரொட்டேரியன்
ரமேஷ் குமார் அமைப்பாளர்,
மற்றும்
ரொட்டேரியன் புவனேஸ்வரி
அமைப்பாளர்,
மற்றும் ரொட்டேரியன் இளங்கோவன்
அமைப்பாளர் ஆகியோர் மேற்பார்வையில் நிகழ்ச்சியின் முடிவில் சிறப்புரையாற்றியும், நன்றியுரை கூறியும் பின்னர் யோகா உலக சாதனை நிகழ்வு இனிதே முடிவடைந்தன.















