மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா , விற்பனை செய்யப்படுவதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் பாக்கெட்டுகளாக மூட்டைகளில் கொண்டு வந்து கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த இலவம்பேடு பகுதியைச் சேர்ந்த ஹௌதுல்அலிம் (50) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்களை கைப்பற்றி விசாரணை செய்தபோது மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் ராஜேஷ் என்பவரது வீட்டில் வீட்டில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது பின்னர் வீட்டில் சோதனை செய்த போது குட்கா பொருட்கள் தயார் செய்து மூட்டை மூட்டையாக பாக்கெட்டுகளில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது பின்னர் 100 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இருசக்கர வாகனம் மிக்ஸி மற்றும் ராஜேஷ்,ஹௌதுல்அலிம், ஆகியோரை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
















