செங்கல்பட்டு மாவட்டம், கடலூர் பெரியக்குப்பத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி,(42), நான் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளேன். என் கணவர் ஞானவேல் கடந்த 26ம் தேதி அன்று என் கணவர் மற்றும் அதே ஊரே சேர்ந்த மாரிமுத்து மகன் ஞானவேல் என்பவருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் தொடர்பாக தகராறு நடந்தது. இது தொடர்பாக அன்று கூவத்தூர் போலீசில் புகார் அளித்தேன். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். நான் புகார் அளித்ததை காரணம் காட்டி அந்த பகுதியில் கட்டபஞ்சாயத்து செய்து வரும் குணாளன் என்பவர் மூலம் பிரச்னை செய்ய ஆரம்பித்தனர். பின், எங்கள் தரப்பை சேர்ந்த மதன், கணவர் ஞானவேல், ரகுபதி,ராஜாவேல், ரமேஷ், ஆறுவேல்,செல்வகுமார், காமேஷ், அருண்குமார், அஜய் ஆகியோரின் குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் நான் நடத்தி வரும் மளிகை கடையில் எந்த பொருளும் வாங்க கூடாது என அங்குள்ள பொதுமக்களை மிரட்டியும் வைத்துள்ளனர். மேலும்,பொது குடிநீர் குழாயில் குடிநீர் பிடிக்க கூடாது, எங்களிடம் யாரும் மீன்கள் வாங்க கூடாது.மீன்பிடி தொழிலுக்கு செல்ல கூடாது என எங்களை 5 ஆண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக நாங்கள் கூவத்தூர் காவல் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து இருந்தோம். இதனால் மேலும் ஆந்த்திரமடைந்த அவர்கள் உங்களுக்கு ஊரைவிட்டு ஒதுக்கி தண்டனை கொடுத்தும் திருந்த மாட்டீர்களா? என கூறி நேற்று முன் தினம் இரவு என் கணவர் மற்றும் அவர்களை சர்ந்தோர்களை கத்தி , கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தினர். எனவே எனக்கும், என் கணவர் மற்றும் எங்களை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டுகிறோம்.இவ்வாறு அவர்கள் புகாரில் கூறியுள்ளனர்.













