தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 200கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பினர்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவஹிருல்லா:பீகார் குஜராத் மேகாலயா மிசோரம் நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான லட்சதீப இங்கு மட்டுமே முழுமையான மதுவிலக்கு இருக்கிறதுமனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரிலும் மனிதநேயம் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்று இருக்கிறது இந்த சம்பவத்தை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டங்களை கடுமையாக்கி மக்களை பாதுகாக்க வேண்டும்விஷ சாராய சாவுகளினால் ஒரே நேரத்தில் 60 பேர் உயிரிழக்கின்றனர் அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே கள்ளசாராய சாவுகள் நடைபெற்று நடைபெற்று இருக்கின்றனஆனால் இந்த விஷ சாராய வழக்கில் ஒரே நாளில் 60 பேருக்கு மேல் இறந்ததால் இது தமிழ்நாட்டில் செய்தியானது
ஆனால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவினால் மெல்ல மெல்ல தமிழ்நாட்டு மக்கள் இறந்து வருகின்றனர்
2016 இல் பீகார் மாநிலத்தில் தேர்தல் நடக்கக்கூடிய நேரத்தில் நிதீஷ் குமார் அவர்கள் மதுவிலக்கை கொண்டு வந்தால் உங்களுக்கு ஓட்டளிப்போம் என்று மக்கள் சொன்னார்கள்
நிதீஷ் குமார் நான் முதலமைச்சரானால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று கூறினார்
அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன் பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது அதன் பிறகு பீகாரில் குடும்பங்களின் வருவாய் அதிகமாக இருக்கிறது அங்கு குடும்பங்கள் வாங்கும் பாலின் அளவு அதிகரித்துள்ளது அங்கு இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது பல்வேறு வகையான குற்றங்கள் குறைந்து இருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
இந்த முறை அங்கு தேசிய ஜெனநயக கூட்டணி பெரு அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அங்கு முழுமையான மதுவிலக்கை கொண்டு வந்தார் என்ற ஒற்றை காரணத்திற்காக பீகார் மக்கள் நிதிஷ்குமாருக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்துள்ளனர்
அதேபோல் தமிழ்நாட்டில கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் குடும்பத் தலைவர்களையும், குடும்பங்களில் உள்ள வருங்கால தலைமுறையினர்களை பாதுகாக்க மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் மகளிர்களுக்காக மாத உரிமைத் தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் என மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்
மேலும் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும் பொருளாதாரத்தில் ஒன் ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆக உயர்த்துவதற்கு உதவி செய்ய இருப்பது இந்த பூரண மதுவிலக்கு தான்
தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முழுமையான மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அன்பான வேண்டுகோளாக வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம்
மனித நேய மக்கள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டமாக இதை எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு இதை கோரிக்கை ஆர்ப்பாட்டமாக வைத்துக் கொள்ளவும் என்று கூறினார..
















