கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு-கொலையாளிகளை கொருக்குப்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

0
288

தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவை சேர்ந்தவர் தினேஷ் என்கின்ற ஸ்வீட் தினேஷ் (27) பிரபல ரவுடி இவன் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில் இன்று மதியம் கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் செட்டி தெருவில் உள்ள ஒரு டாஸ்மார்க் மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தபோது அப்போது உள்ளே வந்த அடையாளம் தெரியாத மூன்று வாலிபர்கள் தாங்க மறைத்து வைத்திருந்த கத்தி அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கொண்டு தினேஷ் வெட்ட வந்தனர் அப்போது தினேஷ் அவர்களை தடுத்து அங்கிருந்து தப்பிச் செல்ல ஓடினார் விடாத அவரை துரத்தி சேர்ந்த மூன்று வாலிபர்கள் தலை முதுகு, கை உள்ளிட்ட பகுதிகளில் சாரமாரியாக வெட்டினர் அங்கிருந்த பொதுமக்கள் கத்தியதும் மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர் இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் இருந்த தினேஷை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இது குறித்து கொருக்குப்பேட்டை ஆய்வாளர் யுவராஜ் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிஸ்கட் சந்தோஷ் என்பவரை தினேஷ் அவருடைய கூட்டாளிகள் வெட்டி உள்ளனர் அதன் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் அந்த பகுதி உள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள் முன் விரோத காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது இதனால் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவுடியான தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து அவரை கொலை செய்த மூன்று கொலையாளிகளை கொருக்குப்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here