
சென்னை: மகத்தான மாறுதல்களை எல்லாம் கொண்டு வந்தவர்கள் ஆசிரிய பெருமக்கள்தான். சமூக மாற்றம் என்பது அரசியல் கட்சிகளால் மட்டும் அல்ல ; சக மனிதர்களால் கொண்டுவரப்படுகிறது. எழுத்து படைப்பு என்பதுதான் அனைவரை யும் முன்னேற்றியிருக்கிறது.
சமூகத்தை உள்வாங்கி எழுதக்கூடிய படைப்பாளராக திகழ்கிறார் சுகுமா ரன் என்பது பாராட்டுக்குரியது என “சுகுமாரனின் படைப்புலகம் ” நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தாமரை இதழ் ஆசிரியருமான சி. மகேந்திரன் புகழ்ந்துரைத்து பேசினார்.
சிறார் இலக்கியத்தின் மூத்த எழுத்தா ளர் சுகுமாரனின் படைப்புலகம் நூல் வெளியீட்டு விழா சென்னை கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஏப்ரல். 21 ஞாயிறு அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் குன்றத் தூர் பாரதி இலக்கிய மன்றம் இணை ந்து நடத்திய விழாவில் கோ. எழில் முத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
தலைமை ஏற்று இருந்த தாமரை இதழ் ஆசிரியர் மகேந்திரன் நூலை வெளி யிட்டார். டி. துரைசிங் டி .அற்புதராஜ் இதழாளர் இசைக்கும்மணி உள்ளிட் டோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பயனாடை அணிவித்து,நூல் பிரதிகள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
தலைமை உரையாற்றிய சி. மகேந்தி ரன் பேசியதாவது : சுகுமாரன் எழுத் தாளர் மட்டுமல்ல; பொது வாழ்விலும் இணைந்து இருப்பவர். பொன்னீல னின் ஆசிரியர் பள்ளி மாணவராக இருந்து அவரை பின்பற்றி எழுத்தாள ராகவும் பரிணமித்தவர்.
சுகுமாரனின் படைப்புலக கட்டுரை களின் மூலம் அவர் யார் என்பது தெரியவருகிறது .வாழ்க்கையில் வெற்றி என்பது தோல்விகளால் அமைக்கப்படுவது என்பதை சுகுமா ரனின் வீழ்ச்சி நாவல் எடுத்துரைக் கிறது. கல்வித் துறையில் நீண்ட காலம் இருந்ததினால் அதன் உள்வட் டத்தை அவரால் துல்லியமாக எடுத்து ரைக்க முடிகிறது.
மகத்தான மாறுதல்களை எல்லாம் கொண்டு வந்தவர்கள் ஆசிரிய பெரு மக்கள்தான். சமூக மாற்றம் என்பது அரசியல் கட்சிகளால் மட்டுமல்ல, சக மனிதர்களால்தான் கொண்டுவரப் படுகிறது .எழுத்து படைப்பு என்பது தான் அனைவரையும் முன்னேற்று கிறது.
சமூகத்தை உள்வாங்கி எழுதக்கூடிய வாய்ப்புகள் சிலபேருக்குதான் வாய்த் திடும்; அதில் சுகுமாரனும் ஒருவர். எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய விமர்சனங்களே அவர்களை முழுமை ப்படுத்துகிறது என பேசினார்.
எழுத்தாளர்களை கொண்டாடுவது நமது சமூக கடமையாகும். இருவே றான கோட்பாடுகள் உடையவராக இருந்தவர்களிடமும் நட்பு வட்டத்தை போற்றி பாராட்டி வந்தவர் சுகுமாரன். மிகுந்த வாசிப்பு உள்ளவராக இருந்த தினால்தான் எழுத்தில் பன்முகத் தன்மையை அவரால் கொண்டுவர முடிந்தது.
எல்லாவற்றையும் உள்வாங்கி கவ னித்து எழுத கூடியவரான சுகுமாரன்; ஆசிரியர், படைப்பாளர்,கதை சொல்லி சமூக செயல்பாட்டாளர் என பன்முகத் தன் உடையவர்; அதுமட்டுமல்ல சமூக மாற்றம் விழையும் அனைத்து அமைப் புகளோடும் துணிவாக பயணித்தவர்.
அறிவியல் பூர்வமாக மக்கள் வளர வேண்டும் என்னும் கருத்தாக் கத்தை தனது படைப்புகளில் மூலம் வெளிப் படுத்தியவர்= சுகுமாரன் என சிகரம் செந்தில்நாதன், ஜீவபாரதி, நூலின் தொகுப்பாசிரியர் கே. பி. அறிவானந் தம் உள்ளிட்டோர் வாழ்த்துரைத்து பேசினர்.
சுகுமாரனின் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் ,மொழிபெயர்ப்புகள், சிறுவர் நூல்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள் பற்றி புதிய ஜீவா, கே. நடரா ஜன், சாலை செல்வம், வெற்றிச் செழி யன், விழியன், அண்ணா ஜோதி, ஹேமலதா,ம.ரமணி உள்ளிட்டவர்கள் விரிவாக பேசினார்கள்.
தந்தையாக தனது குழந்தைகளுக்கும்,பள்ளி ஆசிரியராக தனது மாணவர்களு க்கும் கதை சொல்லி யதே தன்னை சமூக பொறுப்புள்ள நல் எழுத்தாளனாக்கியது என சுகுமாரன் தனது ஏற்புரையில் தெரிவி த்தார்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பா ளர்கள் ,பத்திரிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்த விழால் ‘கதை சொல்லி’ கலா நடராஜன் நன்றி தெரிவித்தார்.
இதழாளர் இசைக்கும்மணி














