சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;

0
237

1.02.2024  அன்று  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின்
சார்பாக நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
நிறுவனத் தலைவர் திரு ந.சக்தி படையாட்சி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மறைந்த
வன்னியர்களின் நிரந்தர தலைவன் மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மலரஞ்சலி நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்
வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவருமான திரு கோ.ரவிராஜ்
அவர்களும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
திரு இரா.அருள் அன்பரசுஅவர்களும்
மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னிய அமைப்புக்களின் தலைவர்களும்

வன்னியர் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.என்றும் சமுதாய பணியில்
தீபம் பா சண்முகம்
நாயகர்மாநில அமைப்பு செயலாளர் வன்னியர் மக்கள் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here