திருவள்ளூர் ஜனவரி 31
பொன்னேரி நகராட்சி 15 வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் அடங்கிய 15 வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் பகுதிசபா கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகித்தார்,நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார், இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வானியன் குலம் தூர்வாரி ஆகாயத்தாமரைகளை வெளியேற்றி சீரமைத்து தரவேண்டும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பொழுது கழிவுகளை உடனே வெளியேற்ற வேண்டும், கூடுதலான மின்மாற்றிகளை அமைத்து மின்சாரக் குறையினை போக்க வேண்டும், புதிய சாலைகள் அமைக்க கோரியும், குடிதண்ணீர் பற்றாக்குறை தீர்க்க குடிதண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் உள்ளிட்ட தேவைகளை குறித்து நகர்மன்ற தலைவரிடம் ஆலோசனை செய்து அதனை தீர்மானங்களாக நிறைவேற்றினர் , மேலும் அதனைத் தொடர்ந்து பேசிய மன்ற தலைவர் இவை அனைத்தையும் வெகு விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்தார் இதில் உமாபதி, அருண், மணி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் கோபி, திமுக நிர்வாகி கோட்டி (எ)ரமேஷ், உள்ளிட்ட திரளான அப்பகுதி
பொதுமக்கள் ,அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
















