குடியாத்தம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகள் வாங்க மறுத்த குடியிருப்புவாசிகள்- அறிவிப்பு பலகை வைக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-

0
215

குடியாத்தம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகள் வாங்க மறுத்த குடியிருப்புவாசிகள்- அறிவிப்பு பலகை வைக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-

வேலூர் மாவட்டம் குடியாத்தம், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஏற்கனவே முதல் கட்டமாக குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றங்கரையோரம் உள்ள நீர்நிலைப் பகுதிகளில் இருந்த 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில்

தற்போது பாவாடும்தோப்பு மற்றும் என்.எஸ்.கே.நகர் பகுதிகளில் மேலும் 96 வீடுகளின் ஆக்கிரமிப்புகள் அகற்ற பொதுப்பணித்துறையினர் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்க சென்ற போது அதை வாங்க மறுத்துள்ளனர்

இதனால் அங்கு அறிவிப்பு பலகை வைக்க இன்று அதிகாரிகள் சென்ற போது அறிவிப்பு பலகை வைக்க விடாமல் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் ஆற்றை முழுமையாக அளவீடு செய்த பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
இதனால் பாவோடும் தோப்பு மற்றும் என் எஸ் கே நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here