செய்தியாளர்கள் தங்கள் எல்லைகளை மீறக்கூடாது – மீறினால், அதனால் ஏற்படும் பின்விளைகளை சந்திக்க நேரிடும்!.
சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்தை தொடங்கி வைத்து சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு.
சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள்
சங்க தொடக்க விழா தமிழ்நாடு பார் கவுன்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா சங்கத்தை தொடங்கி வைத்து பேசியதின் சுருக்க உரை.
சென்னை உயர் நீதிமன்ற பத்திரிகையாளர் சங்க தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் உங்களுக்கு வழங்கியது
அடையாள அட்டை அல்ல தங்க விருது.
சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை மற்றும் செய்தித்துறை ஆகிய நான்கும் முக்கிய தூண்கள்.
நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளது.
செய்தியின் கண்ணியத்தை காக்கும் பொறுப்பு செய்தியாளர்களுக்கு உண்டு.
செய்தியாளர்கள் தங்கள் எல்லைகளை மீறக்கூடாது, தவறான செய்தியினால் எந்த ஒரு சாமானிய, பாமரமக்கள் பாதிக்கப்பட்டாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு செய்தியாளர்கள் பொறுப்பேற்க நேரிடும்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை சொல்ல சாதாரண தபால் கார்டு போதுமானது, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அது சென்று சேரும்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடாதீர்கள், விசாரணை நடைபெறும் போதே, தீர்ப்புகளை அனுமானம் செய்து வெளியிடாதீர்கள்.
தவறான செய்தி வெளியிட்டு, குற்றமற்றவர் பாதிக்கப்பட்டால் அவர் அதிலிருந்து மீள்வது கடினம்.
அளவை தாண்டி நீங்கள் செயல்பட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை உங்களால் தாங்க முடியாது.
எனவே கவனமாக செய்திகளை கையாளுங்கள்.
அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன்,
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.














