திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெரிய ஒபுலாபுரம் கிராமத்தில் முன்னாள் பாமக ஒன்றிய கவுன்சிலர், வன்னியர் சங்க ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவருமான திருமதி சாவித்திரி அம்மையார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி அவர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் அய்யாவின் போர் படைத் தளபதி கோ ரவிராஜ் அவர்கள் கலந்துகொண்டு அம்மையாரின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர், மக்கள் சேவை சுடர் திரு குபேந்திரன், மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

















