சென்னை எம்ஜிஆர் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்தி பிரிவில் செய்தியாளராக பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு பணி முடிந்து சென்றுள்ளார். அப்போது எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடியாக ராயப்பேட்டை மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார். இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணனின் இன்று உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சி ஊழியர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில், மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பலியான பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.














