மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வீடியோ கேமில் இருந்த கவுன்சிலர் ;

0
210

மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில்  200 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்ய வில்லை. மழைநீர் கால்வாய் பணிகள் முறையாக நடக்க வில்லை. காரணம் சொல்லாமலே அதிகாரிகள் அபராதம் போடுகிறார்கள். கவுன்சிலர்கள் சாலைகளை சீர் செய்ய எழுதி கொடுத்தால் அதிகாரிகள் நிராகரிக்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சினைகளை மன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து கவுன்சிலர்கள் விவாதித்து கொண்டிருந்தார்கள். பரபரப்பாக கூட்டம் நடந்து கொண்டிருந்தது.  ஆனால் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் மடிப்பாக்கம் 188-வது வார்டு கவுன்சிலர் சமீனா செல்வம் தனது செல்போனில் வீடியோ கேம் விளையாட்டில்  இருந்தார். கேமிரா காட்சிகளுக்குள் சிக்கிய இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மன்ற கூட்டங்களில்  கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எப்படி பேசுகிறார்கள். முக்கியமான தீர்மானங்கள் மீது எப்படி விவாதிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here