குடியாத்தம்- அணங்காநல்லூர் இடையே மீண்டும் டவுன் பஸ்-சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு கொடியசைத்து டவுன் பஸ்சை தொடங்கி வைத்தார்.

0
245
  1. பல வருடங்களுக்குப் பிறகு குடியாத்தம்- அணங்காநல்லூர் இடையே மீண்டும் டவுன் பஸ் இயக்கியதற்கு கழக தலைவர், தங்க தளபதி, இந்தியாவின் ஒப்பற்ற முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள்*

 

*குடியாத்தம்- அணங்காநல்லூர் கிராமத்திற்கு இடையே சென்று வந்து கொண்டிருந்த டவுன் பஸ் சுமார் 15 ஆண்டு காலமாக இயங்காமல் இருந்தது இதனால் குடியாத்தத்தில் இருந்து அணங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ள நத்தம், மேல் ஆலத்தூர்,பட்டு, கொத்தகுப்பம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.*

*வேலூர் மாவட்ட கழக செயலாளர் இளம் புயல் அண்ணன் ஏ.பி. நந்தகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் குடியாத்தம்- அணங்காநல்லூர் இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை விடுத்தார்.*

*குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கோரிக்கையை ஏற்ற போக்குவரத்துதுறை அதிகாரிகள் குடியாத்தம் அணங்காநல்லூர் இடையே தினமும் மூன்று முறை அணங்காநல்லூர் கிராமத்திற்கு சென்று வரும் வகையில் டவுன் பஸ் மீண்டும் இயக்க தொடங்கினர்.*

 

*இந்த டவுன் பஸ் தொடக்க விழா இன்று சனிக்கிழமை காலை குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு கொடியசைத்து டவுன் பஸ்சை தொடங்கி வைத்தார். தொடர்ந்து டவுன் பஸ்சில் அமர்ந்துகொண்டு அணங்காநல்லூர் கிராமம் வரை எம்எல்ஏ அமலு விஜயன் சென்றார்.*

*வழியில் உள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு டவுன் பஸ் இயக்கப்பட்டதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் கிராம மக்கள், பெண்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர் மீண்டும் டவுன் பஸ் இயக்க காரணமான தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பாராட்டி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.*

 

*நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளூர்ரவி, குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ம.மனோஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி. ரஞ்சித்குமார்,ம. சூரியகலா மனோஜ்குமார், அணங்காநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி முருகன், துணைத்தலைவர் குமாரி கிருபானந்தம் உள்பட கழக நிர்வாகிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here