திருச்சி திருவெறும்பூர் பி. எச். இ. எல் கம்யூனிட்டி சென்டரில் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை SKAT கோச் கமிஷன் சேர்மனும், சென்னை மாவட்டச் செயலாளருமாகிய இஸ்கஃப் மூ. சீனிவாசன் அவர்களின் முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். SKAT தலைவர் க்யோசி.ஈஸ்வர்குமார், பயிற்சியாளர் . அசோக் பரிசுகளை வழங்கி வீரர்-வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி கௌரவித்தனர் . சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கலாச்சார நட்புறவுக் கழக சென்னை மாவட்டப் பொதுச் செயலாளர் பா. செந்தில்குமார்,சிலம்பம் அசோசியேசன் தலைவர்
T . பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















