10.06.2022.
மீனவ பெண்கள் கொலை, கொள்ளையில் ஈடுப்பட்டுள்ள நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிசந்தை காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட, அம்மாண்டி விளையை அடுத்துள்ள முட்டம் மீனவ கிராமத்தில் குழந்தை ஏசு தெருவில் வசித்து வரும் ஆன்றோ சகாயராஜ் என்பவரின் மனைவி பவுலின் மேரி இவர்களுக்கு ஆலன், ஆரோன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். அதே போன்று மூத்த மகன் ஆலனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இரண்டாவது மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த 05.06.2022 அன்று அல்லது 06.06.2022 அன்று இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம், என சந்தேகப்பட்டு வரும் நிலையில் கடந்த 07.06.2022 செவ்வாய் கிழமை அன்று நண்பகல் வேளையில் கொலை நடந்த வீட்டின் பூட்டை உடைத்து இறந்த தாய்,மகள் இரண்டு சடலங்களையும் காவல்துறை கைப்பற்றி உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டுள்ள பவுலின் மேரியின் கை விரல்களிலும் , நகத்திலும் குறைந்த வயதுயுடைய சுமார் 18 வயது முதல் 25 வயது மதிக்க தக்க ஆண் தலை முடி இருந்ததாக சொல்லப்படுகின்றது.*
மேலும் இந்த சம்பவத்தில் கற்பழிப்பு போன்ற எந்த நிகழ்வும் இல்லை என்று பரிசோதனை விபரங்கள் சொல்வதாக சொல்லப்படுகின்றது.
மீன்பிடி துறைமுகம் சார்ந்த பகுதியான முட்டத்தில் அதிகப்படியான கஞ்சா, போதை மாத்திரைகள் அதிக அளவில் கிடைப்பதாலும் போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் இந்த கொலையில் ஒன்றுக்கு மேற்ப்பட்டோர் இதில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்றும் , உள்ளூர் நபர்களாகவோ அல்லது வட மாநிலத்தில் இருந்து தொழிலுக்கு வந்த நபர்களாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
மீன்பிடி துறைமுகம் சார்ந்த மீனவ கிராமமான முட்டத்தில், திரேசம்மாள் ( வயது 98 ) மகள் பவுலின் மேரி (வயது 48) இவர்கள் இருவரும் தனியாக வீட்டில் இருந்த மீனவ பெண்களை குறி வைத்து அம்மா மற்றும் மகள் இருவரையும் மிக மிக கொடூரமாக இரட்டை கொலை செய்துள்ள மர்ம நபர்கள் திரேசம்மாள் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயின், பவுலின் மேரி அணிந்து இருந்த 11 பவுன் தங்க தாலி என மொத்தம் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற உண்மை கொலையாளிகளை காவல்துறை உடனே கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எந்த குற்றமும் எந்த பாவமும் செய்யாமல் தாயை இழந்து நிற்கதியாக நிற்கும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்திற்கு ஆறுதலாக படித்துள்ள இரண்டு மகன்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் நாஞ்சில் P.ரவி.
தலைவர். அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)
இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு( IFIF ).
















