வன்னியர் இட ஒதுக்கீடு – நாளை தீர்ப்பு ;

0
272

அ.தி.மு.க. அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பாமக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here