வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தில் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அருகே தண்ணீர் குட்டை உள்ளது. அந்த குட்டை பகுதியில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியது மேலும் நாய்கள் சுற்றி வந்துள்ளது இதனை கண்ட கிராம மக்கள் அருகே சென்று பார்த்தபோது பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது மேலும் அந்த குழந்தை வீசப்பட்டு ஒரு நாட்கள் மேல் ஆகி இருக்கலாம் சற்று அழுகிய நிலையில் அந்த பெண் குழந்தை சடலம் இருந்தது இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர் பெண்கள் கண்ணீர் விட்டனர் இந்த சம்பவம் தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மேலும் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














