வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பூஜாரி வலசை கிராமம் வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி கோட்டீஸ்வரி இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர் இளைய மகன் யுவராஜ் வயது 14, பூஜாரி வலசை காமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுடன் யுவராஜுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது சக மாணவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர் இந் நிலையில் மாணவன் யுவராஜ் இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்து பள்ளியில் புத்தக பையை வைத்து விட்டு பென்சில் வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே உள்ள பெட்டிக் கடைக்கு வந்துள்ளார் அப்போது நேற்று தகராறில் ஈடுபட்ட சக வகுப்பு மாணவன் லோகேஷ் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவர் யுவராஜின் வலது மற்றும் இடது பக்க மார்பு வலது கை மற்றும் முதுகுப் பகுதியில் சரமாரியாக பிளேடால் வெட்டி உள்ளான் இதில் பலத்த காயம் அடைந்து பள்ளி சீருடை முழுவதும் ரத்தமானது உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் கிராம மக்கள் ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் 14 தையல் போடப்பட்டுள்ளது மாணவர்களின் சிறு பிரச்சனை மோதலாக மாறி படுகாயங்கள் ஏற்படும் அளவிற்கு மாறியுள்ளது.
சம்பவம் குறித்து பரதராமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் சிறுசிறு மாணவர்கள் இடையே சிறு சிறு பிரச்சினை வரும்போது பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உடனடியாக தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் கடைசியில் பிளேடால் சரமாரியாக வெட்டும் நிலைக்கு வந்துள்ளது
















