ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் அதிமுக மறியல் போராட்டத்தில் ஈடுபடும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:

0
226

சென்னை ராயபுரம்:
உதய்நிதி ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கரூரில் பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரித்தது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

நீட் தேர்வு குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது அதற்காக எல்லாம் வன்முறையை கையாளக் கூடாது. வன்முறை தீர்வு அல்ல.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்று கொரோன வழி முறைகள் ஆகியவை ஆளும் கட்சியினருக்கு கிடையாது எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டம் ஆளும் கட்சிக்கு ஒரு சட்டம் என உள்ளது.

முறையாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றா விட்டால் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஸ்டாலின் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்காமல் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆடு தன் குட்டியை இறக்கி ஆழம் பார்ப்பது போல் ஸ்டாலின, உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கிவிட்டு ஆழம்பார்க்கிறார். மக்களை சென்று சந்திக்கும் இடங்களில் மக்களிடமிருந்தே தேர்தல் வாக்குறுதி பற்றிய கேள்விகள் வருவதால் மக்களை சந்திக்க திமுகவினர் தயங்குகின்றனர்.

அதிமுகவின் சாதனைகளையும் திமுகவின் சோதனையையும் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம். அதிமுகவிற்கு மக்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here