எண்ணூர் ஆய்வாளரை தாக்கிய குற்றவாளி மற்றும் அவரது தாய் தங்கை என மூன்று பேர் கைது:

0
540

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் இன்று எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் டேவிட் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்பொழுது சுனாமி குடியிருப்பு பகுதியின் மாடியில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்து கொண்டிருந்ததை கவனித்து அதனை ஆய்வாளர் தடுக்க சென்றார்

பல்வேறு காவல் நிலையங்களில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள தினேஷ் குமார் மற்றும் அவரது தாய் தங்கை என மூன்று பேரும் சேர்ந்து தடுக்க வந்த ஆய்வாளரை தாக்கி கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆய்வாளர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இதனைத் தொடர்ந்து காவலர்களை தாக்கியதற்காகவும் காவலர்களை வேலை செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக தினேஷ்குமார் அவரது தாய் அமுதா மற்றும் சகோதரி சாந்தகுமாரி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here