புதிய வகை கொரோனா தமிழகத்தில் இல்லை. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ;

0
308

தமிழகத்தில் டெல்டா வைரஸ் மற்றும் சாதாரண கொரோனா பாதிப்பே உள்ளது.
புதிய வகை கொரோனா தமிழகத்தில் இல்லை.
மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தேசிய நல வாழ்வு குழுமம் மற்றும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ ஆயத்த முனையம் இணைந்து உலக பக்கவாத தடுப்பு தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள அரச ஸ்டான்லி மருத்துவகல்லூரி கூட்டரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஸ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக பக்கவாத விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார். அப்போது பேசுய அவர் கூறியதாவது,

மனித உடலில் ரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைக்க சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ அதிகரித்தாலோ அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் ஒரு பகுதியாகவே பக்கவாத நோயும் ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சியும், உணவு முறை பழக்கவழக்கம் மட்டுமே நம்மை நோயில் இருந்து காக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தேசிய நல வாழ்வு குழுமம், தமிழ்நாடு நலவாரியம் சார்பாக உலக பக்கவாத தினம் ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டாடப்பட்டுள்ளது.

உலகளவில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிப்படைகின்றனர். இதனால் 1 1/2 கோடி பேர் இறப்பும் ஏற்படுகிறது. இந்திய அளவில் 6 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பும், இதனால் 1 1/2 லட்சம் பேர் இறக்கும் நிலையும் உள்ளது.

பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர்களை 4 1/2 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தால் அவர்களை குணப்படுத்தலாம். இல்லையென்றால் அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி மூளையை செயலிழக்க வழி செய்யும்.

பக்கவாத நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அல்டிநோஸ் எனும் மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு முறை மருந்து செலுத்த ரூ.35 ஆயிரம் செலவாகிறது. அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த மருந்து தயார் நிலையில் உள்ளது. சாதாரணமாக தலைவலி, கண் பார்வை மயங்குதல், வாய் குளறுதல், கை, கால் விழுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இந்த பக்கவாத நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
10 வாகனங்கள் மூலம் மக்களின் இடத்திற்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏ ஒய் 4 வகை கொரோனா கர்நாடகாவில் மொத்த பாதிப்பில் 1 சதவிகிதம் புதிய கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 90 சதவிகிதம் டெல்டா வைரஸ் பாதிப்பு தான் உள்ளது. நேற்று எடுக்கப்பட்ட மாதிரிகளில் 65 சதவிகிதம் டெல்டா வைரஸ் பாதிப்பும் மீதம் கொரோனா பாதிப்பு உள்ளது.

மேலும் சுகாதார நிலையம் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்க காரணம் ஜப்பானை போல தமிழகத்தில் வயதானவர்கள் அதிகரிக்கும் நிலை தற்போது உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி, நிலைய மருத்துவர் ரமேஷ், மருத்துவ பேராசிரியர்கள், மற்றும் செவிலியர்கள் மருத்துவ மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here