திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு காயல் அப்பாஸ் கடும் கண்டனம் ;

0
264

திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான கொலை வெறி தாக்குதலுக்கு முஸ்லிம் ராஷ்டிரீய மன்சியின் தமிழ்நாடு மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .

திரிபுராவில் மூன்று நாட்களுக்கு முன்பாக நடை பெற்ற வன்முறைகளில் பள்ளிவாசல்களை சேதபடுத்தியும் , முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், வாகனங்களை அடித்து நொறுக்கியும் முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்திய சமூக விரோதிகளை முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது .

இந்த வன்முறையில் ஈடு பட்ட சமூக விரோதிகளை அம்மாநில காவல் துறையினர் உடனடியாக கைது செய்து வன்முறை சம்பவத்திற்கு மூல காரணம் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான தண்டனை வழங்க பட வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் வலியுறுத்துகிறது

நடை பெற்ற வன்முறை சம்பவத்தில் பாதிக்க பட்ட இஸ்லாமியர்களுக்கு நீதி கிடைக்க அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் தானாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும். எனவும் வன்முறையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு உரிய இழப்பீட்டை அம்மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் வலியுறுத்துகிறது

வட மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான கொலை வெறி தாக்குதல், படுகொலைகள், பள்ளிவாசல்கள் சேதம்படுத்தல் , போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வன்னமாக உள்ளது. ஆகவே : இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here