இடி மின்னல் தாக்கி மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர் பலி:

0
308

*சென்னை காசிமேடு மீன்பிடித்துறை முகத்தில் இருந்து*

*இன்று 05.10.2021 அதிகாலை சுமார் 3 மணியளவில் பைப்பர் படகில் R.தேசப்பன்( 38) (த/பெ.ராமு,) தமிழரசன் , தியாகு, கோவிந்து என 4 மீனவர்கள்*

*குறைந்த தூரத்தில் சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.*

*அப்போது சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகர், 4 வது தெருவை சார்ந்த படகின் உரிமையாளரும், டிரைவருமான மீனவர் R.தேசப்பன் என்பவர்*

*மீன்வளத்துறை மூலம் வழங்கிய வயர்லஸ் (வாக்கி டாக்கி) கையில் வைத்துக்கொண்டு தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது*

*திடீர் என இடி மின்னல் மீனவர் கையில் வைத்து இருந்த வாக்கி டாக்கியால் மின்னல் இழுக்கப்பட்டு மீனவர் R.தேசப்பன் இன்று 05.10.2021 காலை சுமார் 8.00 மணியளவில் மின்னல் தாக்கிய சம்பவ இடமான படகில் உடல் கருகி உயிர் இழந்தார்.*

*உயிர் இழந்த மீனவர் R.தேசப்பன் (வயது 38) இவருக்கு லெட்சுமி பிரியா (14 வயது) மகளும், அர்ஜுன்( 12) வயது மகனும், பபிதா என்ற மனைவியும் உள்ளனர்.*

*படகில் உடன் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.*

*சகா மீனவர்களால் இறந்த R.தேசப்பனின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டது.*

*R.K.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் உடன் இருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்கள்.*

*காசிமேடு மீன்பிடி துறைமுக N.4.காவல் நிலையத்திலும், மீன்வளத்துறை உதவி இயக்குனரிடமும் இறந்த மீனவர் R.தேசப்பன் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here