சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசிய போது எதிர் முனையில் பேசியவர் தன்னை இந்தியன் வங்கி மேலாளர் என அறிமுகம் செய்து கொண்டு புதிய ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், உடனடியாக வங்கிக்கு வந்து பழைய நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்று செல்லுமாறு கூறியுள்ளார்.
உடனடியாக வினோத் தனது கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பாபு என்ற ஊழியரின் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கிக்கு அனுப்பியுள்ளார். வங்கியின் உள்ளே பாபு நுழைந்தவுடன் ஒரு அடையாளம் தெரியாத நபர் அவரை வழிமறித்து தாங்கள் தானா எனக்கூறி அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு வங்கியில் பணத்தை கட்டுவது போன்று எழுதிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்
இதனையடுத்து சிறிது நேரம் காத்திருந்துவிட்டு விசாரித்தபோது வினோத் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனடியாக சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வண்ணாரப்பேட்டை மண்டல துணை ஆணையாளர் சிவபிரசாத் ஆணைக்கிணங்க உதவி ஆணையாளர் அனந்தகுமார் தலைமையில் ஆய்வாளர் தவமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்ற மர்ம நபரை சித்தூரில் வைத்து கைது செய்தனர்
கைது செய்த நபரை கொருக்குப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த பொழுது முரளி வயது 57 ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் மீது தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது














