காவல் துறையின் கவனத்திற்கு
உயர்திரு தாசில்தார்..
அவர்களின் கவனத்திற்கு…
பேரூராட்சி செயல் அலுவலரின் கவனத்திற்கு….
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி தொகுதியில்
பள்ளிப்பட்டு பேரூராட்சியில்
வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் பலாப்பழம் நேரடியாக உரித்து வைத்து விற்கிறார்கள். அவைகளை மக்கள் வாங்கிச் சென்று கழுவாமல் தான் சாப்பிடுவார்கள்,கழுவினாலும் அவர்கள் சாதாரணமாக குழாய் தண்ணீரில் தான் கழுவுவார்கள் அப்படியும் கழுவினாலும் கொரோணா வைரஸ் போகும் வாய்ப்புகள் இல்லை ஆகவே உரித்து வைத்த பலாப்பழம் விற்பவர்கள் MASK ஒப்புக்கு அணிகிறார்கள்.வாய்,மூக்கை மூடுவது இல்லை பழங்களுக்கு முன்பு அமர்ந்து பேசுகிறார்கள் அவர்களின் எச்சில் அனைத்து பழங்களிலும் விழுகிறது..
கண்கூடாக நடக்கும் காட்சி இது.
விற்பவருக்கு கொரோணா நோய் இருந்தால் பலாப்பழம் சாப்பிடும் அத்தனை பேருக்கும் நோய் வரும் என்பது தவிர்க்கவே முடியாது.. அப்படிப்பட்ட பேராபத்தில் இருக்கிறார்கள் பள்ளிப்பட்டு மக்கள் அதேபோல பனை நுங்கு விற்பவர்கள் MASK அணிவதில்லை.நுங்கை 100% கழுவ முடியாது.ஆபத்தானது நுங்கு விற்பவர்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் அத்தனை பேருக்கும் கொரோணா வர வாய்ப்பு உள்ளது.இது மிகப்பெரிய பேராபத்து தொடர்ந்து ஒருவார காலமாக கவனித்துக் கொண்டு வருகிறோம் இவர்கள் சரியாக மாஸ்க் அணிவது இல்லை.. தாடையின் கீழே MASK-ஐ தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எச்சில் உரித்து வைத்த பலாப்பழங்கள் மீதும் நுங்குகளின் மீதும் விழுகிறது. கண்ணெதிரில் வாங்குபவர்கள் அப்படியே சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன்.. விற்பனையாளர்களுக்கு நோய் இருந்தால் ஊர் முழுவதும் பரவும்.அதேபோல் நுங்கு விற்பவர்களிடம் மக்கள் நேரடியாக வாங்கி அப்படியே வாயில் போட்டு கொள்வதுமாக உள்ளனர்.இவைகள் எல்லாம் நேரடியான நோய் தாக்குதல்கள் ஆகவே விற்பனையாளர்களை கவனிக்க வேண்டும்.மீறினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து விற்பனையை தடுக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்
மக்கள் முடிந்தவரை எதையெல்லாம் சரியாக கழுவ முடியாதோ..அந்த பழங்களை வாங்க வேண்டாம்..சாப்பிட வேண்டாம்..
மக்கள் நலன்கருதி
K.S.DILEEP=PALLIPAT
DISTRICT REPORTER
















