வியாபாரிகள் சங்கம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்!

0
316

வண்ணாரப்பேட்டையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்*

சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரதோட்டம் பகுதியில் பணியாற்றி கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றியும், வருமானம் இன்றியும் தவித்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வடசென்னை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் எர்ணாவூர் நாராயணன் 150 க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அரசி, பருப்பு அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் சங்கத்தின் செயலாளர் காமாட்சி வி கண்ணன், லார்டு பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எர்ணாவூர் நாராயணன் கூறியதாவது, தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் வியாபாரிகளை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசு ஆவண செய்ய வேண்டும். மேலும் மூடி உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் மின்சார கட்டணத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு வியாபாரிகளுக்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here