வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பாலாற்றில் நான்கு வருடம் கழித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்தநிலையில் அணைக்கட்டு தொகுதியில் உள்ள 11 ஏரிகலுக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் திருப் படவில்லை என்று இன்று அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அவர்கள் கட்சி தொண்டர்களை சேர்ந்து பள்ளிகொண்டா மேம்பாலத்தில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் நான்கு வருடம் கழித்து பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட 11 ஏரிகளில் இதுநாள் வரை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை பாலாற்றில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக அரசை கண்டித்து சாலை மறியல் செய்தார் இந்த நாள் வேலூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து ஏழைகளுக்கும் பாலடை வரும் தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பப்படும் என்று உறுதி அளித்தனர் பிறகு சாலைமறியல் கைவிடப்பட்டது மேலும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அவர்கள் தாமாக முன்வந்து பொக்லைன் இயந்திரம் மூலமாக பாலாற்றில் வரும் தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.















