கத்திவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் சிபி சாலை பொதுநல வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக கொருக்குப்பேட்டையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்தனர்

0
293

கத்திவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் சிபி சாலை பொதுநல வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக கொருக்குப்பேட்டையில் உணவு அளித்தனர்
தற்பொழுது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இந்த முழு ஊரடங்கில் ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர் இதனை போக்கும் விதமாக கொருக்குப்பேட்டையில் அமைந்திருக்கும் கத்திவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் சிபி சாலை பொதுநல வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேளை உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அளித்து வருகின்றனர்
இதில் சிறப்பு விருந்தினராக H6 ஆர் கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலந்துகொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினார் மேலும் அப்பகுதியில் உள்ளே வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றவர்களை அவர்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று உணவு அளித்து வருகின்றனர் இதில் அச்சங்கத்தைச் சார்ந்த தலைவர் மேகலிங்கம் செயலாளர் ரத்தினம் பொருளாளர் மாரிமுத்து மற்றும் பல உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உணவினை அளித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here