தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடமாடும் மளிகை வியாபார சேவையை MLA எபினேசர் துவக்கி வைத்தார்

0
279

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது தற்பொழுது தளர்வுகளற்ற ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்வதற்கான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது அதன் ஒரு பகுதியாக தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வியாபாரிகளுக்கு நடமாடும் வியாபார சேவையை ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் துவக்கி வைத்தார் மண்டல ஆனையர் வெங்கடேசன் மற்றும் வரி மதிப்பீட்டாளர்கள் உடனிருந்தனர்

இதே போன்று வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சங்க எர்னாவூர் நாராயணன் முன்னிலையில் 100 மேற்பட்ட வணிகர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பாக வியாபாரம் செய்வதற்கு வண்டி பாஸ் பேனர் வழங்கப்பட்டது
இதில் திமுக வடசென்னைக வடக்கு மாவட்ட தலைவர் இளைய அருணா ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆர் கே நகர் பகுதி சுந்தர்ராஜன் ஜெபதாஸ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்
இதன் மூலம் மளிகை கடை வியாபாரிகள் பொதுமக்களிடம் தொலைபேசியில் ஆர்டரை பெற்றுக் கொண்டு வீடுகளுக்கே சென்று பொருட்களை கொடுப்பார் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அருகில் உள்ள அனுமதி பெற்ற மளிகை கடை வியாபாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் இன்று முதல் மளிகை காய்கறிகள் முட்டை ரொட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வீட்டிலிருந்தே ஆர்டர் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும் என்று மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர் வியாபாரிகள் சங்கங்கள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தி வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here