கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தற்போது தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது இதன் காரணமாக சனிக்கிழமை அன்றே பொதுமக்கள் இறைச்சி மற்றும் மீன்களை வாங்குவதற்காக கூட்டம் கூட ஆரம்பித்தனர்
இதனை தொடர்ந்து சனிக்கிழமைகளிலும் ஏராளமான மக்கள் இறைச்சி மற்றும் மீன்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக கூடும் அதனால் அதனை தடுப்பதற்காக சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகள் மற்றும் மீன் விற்பனை கடைகளுக்கு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது அதனால் நாளை சனிக்கிழமை என்பதால் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதனால் இன்றைய தினமே இறைச்சி மற்றும் மீன்களை பொதுமக்கள் வாங்க தொடங்கினர்
அதன் ஒரு பகுதியாக காசிமேட்டில் மீன் வியாபாரிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர் இதில் பலரும் முக கவசங்களை அணியாமல் பாதுகாப்பு இல்லாமல் வருவதனால் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்த நிலையில் இன்று காவல் துறை சார்பாக முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டது














