ஆசிரியர் நண்பரின் சிகிச்சைக்காக 1400 கி.மீ. ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0
281

ஜார்க்கண்ட்- பகோராவை சேர்ந்தவர் தேவேந்திரா. ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது நண்பர் ரஞ்சன் அகர்வால் (வயது 38). இவர் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமாகி ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. மேற்கொண்டு ஆக்சிஜன் கிடைக்கவில்லை.

எனவே ரஞ்சன் அகர்வால் குடும்பத்தினர் தேவேந்திராவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பகோரா நகரில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு முயற்சித்தார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு நிறுவனத்தில் ரூ.10 ஆயிரத்து 400 பணத்தை பெற்றுக் கொண்டு ஆக்சிஜன் வழங்க முன்வந்தனர்.

அந்த சிலிண்டரை தனது காரில் ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கும் பகோரா நகருக்கும் இடைபட்ட தூரம் 1,400 கி.மீட்டர். பீகார், உத்தரபிரதேசம், டெல்லி மாநிலங்களை கடந்து நொய்டா செல்ல வேண்டும். ஆனாலும் காரை ஓட்டிக் கொண்டு டெல்லி நோக்கி பறந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட அவர், திங்கட்கிழமை மாலை நொய்டா வந்தடைந்தார். இடையில் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் போலீசார் அவரை வழிமறித்தனர். ஆனாலும் நிலைமையை எடுத்துக் கூறி அங்கிருந்து கடந்து சென்றார்.

அவர் கொண்டு வந்த சிலிண்டர் மூலம் ரஞ்சன் அகர்வாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார். உடல் நலம் முழுமையாக தேறும் வரை டெல்லியிலேயே இருக்கப்போவதாக தேவேந்திரா கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here