தொகுதி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது. ஆர் கே நகர் தொகுதி திமுக வேட்பாளர் எபினேசர்!

0
323

வடசென்னை ஆர்.கே.நகர். தொகுதி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது. ஆர் கே நகர் தொகுதி திமுக வேட்பாளர் எபினேசர் தெரிவித்தார். சென்னை, ஆர்கே நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஜே.ஜே. எபினேசர் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னால் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ். திரவியம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்பொழுது வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்டத் தலைவர் திரு.M.S. திரவியம் அவர்கள் தலைமையில் ஆர்.கே.நகர் தொகுதி காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வேட்பாளர் J.J.எபினேசர் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் M.S.திரவியம் மற்றும் சுந்தர்ராஜன், மருது கணேஷ், ஜெபதாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here