வேலூரில் மயாணக்கொள்ளை திருவிழா.

0
281

இறந்தவர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மயாணக்கொள்ளை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் அதேபோல் 2021ம் ஆண்டிற்கான மயானக்கொள்ளை திருவிழா வேலூர் பாலாற்றில் நடைபெற்றது. இதில் வேலூர் மற்றும் வேலூரைச்சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மக்கான், ஓல்டுடவுன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமாக தேரில் அங்காலம்மன், காளி உள்ளிட்ட அம்மன்கள் தேரில்பவனியாக ஆற்றுக்கு சென்று சிறு விடுதல் நிகழ்ச்சிக்குப்பின் இரவில் தேர் ஊருக்குள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் வகையில் இவ்விழா இவ்வருடமும் நடைபெற்றது.
பல லட்சம்பேர்கள் இவ்விழாவை கொண்டாடினர். இவ்விழாவைக்காண வேலூர் பாலாற்றுக்கு வரும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிட்டத்தட்ட இருபதாயிரம் பேருக்கு
விருதம்பட்டு பகுதியைச்சேர்ந்த நண்பர்கள் வி.எம்.ராஜி ஏற்பாட்டில் வி.டி.முருகன். ஞானராஜ், ராம்குமார்,பானிபூரி சுரேஷ், ரவி, பாஸ்கர், நீலமேகம் ஜான் வீரா, காங்கேயன் ஆகிய நண்பர்கள் 15000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here