மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்ததம்!

0
232

*01.03.2021*

சென்னை காசிமேடு மீன்பிடித்துறை முகத்தில் நாட்டுபடகுகள்,சிறிய பைப்பர் படகுகள் நிறுத்தும் இடத்தில் சுமார் 30 முதல் 35 பெரிய விசைபடகுகள்,மற்றும் ஆழ்கடல் விசைப்படகுகளும் ஆக்கிரமிப்பு செய்து சிறிய நாட்டு படகுகளுக்கு *கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சிலர் இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.*

இந்த நிலையில் சிறிய நாட்டு படகு மீனவர்கள் *கடந்த 2 ஆண்டுகளாக மீன்வளத் துறையிலும், காவல்துறையிலும், சம்மந்தப்பட்ட மீனவர்களின் சங்கங்களிலும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .*

மேலும் *காவல்துறைக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஒத்துழைப்பு வழங்கவில்லை* என்பதால்
*மீன்வளத்துறை அதிகாரிகளை நம்பி எந்த பிரோஜனமும் இல்லை என்பதால்.*

இன்று *01 03 2021* திங்கள்கிழமை காலை 10 மணி முதல் காசிமேடு மீன்பிடித்துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு செயல்படும் *ஆரம்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை உள்ள சுமார் 100க்கு மேற்பட்ட மீனவ கிராம மீனவர்கள், கடலில் மீன்பிடிக்க செல்லாமல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் அனைத்து நாட்டுபடகு டிரைவர்கள், தொழிலாளர்கள் பைப்பர் படகு உரிமையாளர்கள், பல மீனவ அமைப்பு தலைவர்கள். என 500 க்கு மேற்ப்பட்டவர்கள் பந்தல் அமைத்து அமைதி வழியில் காலவரையற்ற வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுப்பட்ட போது அரசுதரப்பு உயர் அதிகாரிகளும், இராயபுரம் காவல்துறை உதவி ஆணையாளர் அவர்கள் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் 25க்கு மேற்ப்பட்ட காவலர்கள் .மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர், மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக போராட்டகாரர்களிடம் பேச்சுவார்தை நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுங்கள். ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள பெரிய விசைபடகுகளை உடனடியாக அகற்றி தருகின்றேம் என கூறி*

*காவல்துறை களத்தில் துரிதமாக செயல்பட்டு ஒலி பெருக்கி மூலம் சிறிய பைப்பர் படகுகள் கட்டுவதற்கு அரசு தரப்பில் கட்டிதரப்பட்டுள்ள.*

இந்த இடத்தில் அத்துமீறி பெரிய படகுகளை கட்டியுள்ள படகு உரிமையாளர்கள். உடனடியாக இந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி உங்களுக்கு(பெரிய படகுகளுக்கு) என ஒதுக்கப்பட்ட இடத்திற்கு உங்கள் படகுகளை நீங்களாக எடுத்து கொண்டு சென்று விடுமாறும் காவல்துறைக்கு பெரிய வேலையை கொடுக்காமல் உடனடியாக எடுத்துக்கொண்டு சென்றுவிடுமாறு *காவல்துறை கனிவுடன் அன்புடனும் எடுத்து சொன்னவுடன்.*

ஆக்கிரமிப்பு படகுகள் அனைத்தும் வேறு இடங்களில் மீனவர்களின் உதவியுடன் கட்டப்பட்டது . *இதனால் கடந்த 3 ஆண்டு கால பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால் காசிமேடு மீனவர்களின் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டு.*

மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க ஐஸ், டீசல் மற்றும் இதர பொருட்களை ஏற்றி மீன்பிடிக்க செல்வது என அதிகாரிடம் தொரிவித்தனார். பெரிய ஆழ்கடல் ஆக்கிரமிப்பு படகுகள் காலியான இடத்தில் சிறிய நாட்டுப் படகுககளை மீனவர்கள் (உரிமையாளர்கள்) பைப்பர் படகுகளை கட்ட வைத்தனார்.

இதனால் காலவரையற்ற போராட்டத்தை காசிமேடு மீனவர்கள் கைவிட்டனார்.

*சிறப்பாக செயல்பட்ட மாண்புமிகு: மீன்வளத்துறை அமைச்சருக்கும், இராயபுரம் உதவி ஆணையாளர் , N2 , N4 காவல் ஆய்வாளர்கள்* மற்றும் *காவலர்கள். மீன் வளத்துறை உயர்அதிகாரிகள், மீன் வளத்துறை உதவி இயக்குனர், மீன் வளத்துறை ஆய்வாளர். அனைத்து பணியாளர்கள். மற்றும் பல மீனவ கிராமங்களில் இருந்து கலந்துக்கொண்ட ஊர் பஞ்சாயத்தார், நிர்வாகிகள்* மீனவ *அமைப்பு நிர்வாகிகள் அனைவருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட குழு சார்பில் நன்றி தொரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here