ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்த – ராகுல் காந்தி

0
250

ராகுல் காந்தியுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி எம்பி மேடையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் காலாச்சாரம் , பாரம்பரியம் இன்றியமையாதது. அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை. உங்களது உணர்வுகளையும், கலாசாரத்தையும், ரசித்து பாராட்டவே வந்துள்ளேன்.

ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த ராகுல் காந்தி சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here