தை பிறந்தால் வழி பிறக்கும் – நான் ரெடி நீங்க ரெடியா என திமுக தலைவர் ஸ்டாலின்;

0
365

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக

சென்னை ராயபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக நடத்தும் மக்கள் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வழிநெடுக தொண்டர்கள் படைசூழ திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்களிடம் சென்று கை குலுக்கினார்

பின்னர் பேசிய முக ஸ்டாலின்

ராயபுரம் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கினார்

திமுகவிற்கு முதல் தலைமையகம் சென்னை ராயபுரத்தில் தான் பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டது

கிராம சபை கூட்டம் என்கிற பெயரில் நடத்துவதற்கு ஆளும் கட்சி தடை போட்டது அதனால் நாங்கள் மக்கள் கிராம சபை கூட்டம் என்று மாற்றினோம்

திமுக எதை செய்தாலும் அதை ஆளும் கட்சி தடை போடுகிறது
என்ன தடை போட்டாலும் அதை எதிர்த்து திமுக கிராம சபை கூட்டம் நடத்தும்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை திமுகதான் கையில் எடுத்தது

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளார்
வேலுமணிக்கு வேண்டியவர் அதிமுக நிர்வாகி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்
மேலும் அமைச்சர்களின் மகன் அவர்களுக்கு நெருங்கியவர்கள் என பலரும் தொடர்பில் உள்ளார்கள் அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும்

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது

தை பிறந்தால் வழி பிறக்கும் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நேரம் வந்துவிட்டது இன்னும் நான்கு மாதம் தான் நான் ரெடி நீங்க ரெடியா..

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற ஒரே கட்சி திமுக தான் திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை திமுக கொண்டு வந்தது என்று ஸ்டாலின் பேசினார்

பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற அப்பகுதி பொது மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து பதிலளித்தார் ஸ்டாலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here