ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்கை ஜனவரி 29 ஆம் தேதி தள்ளி வைப்பதாக நீதிபதி ரவி உத்தரவிட்டார்!

0
284

தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சனம் செய்ததாக தமிழக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் எம்.பி,எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

கடந்த ஜனவரி 27ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசை விமர்சித்து உரையாற்றினார்.

கடந்த ஜூன் 5ல் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து டிவிட்டரில் ஸ்டாலின் சில கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல முதல்வர் பழனிசாமி குறித்தும் ஸ்டாலின் பேசியது முரசொலி பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடப்பட்டது.

இதேபோல, தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தொடர்ந்து விமர்சனம் செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக 6 அவதூறு வழக்குகளை தமிழக அரசு சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என எம்.பி,எம்.எல்.ஏ-க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 2 ம் தேதி ஸடாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

ஆனால், அவதூறு வழக்குகளில் டிசம்பர் 2 ம் தேதி ஆஜராகாத நிலையில் இன்று (டிச.30) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவி முன்னிலையில் மு.க ஸ்டாலின் ஆஜராகினார

அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக தகவல்

வழக்கின் அடுத்த விசாரணை நீதிபதி ரவி 29.01.2020 தள்ளி வைத்து உத்தரவிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here