திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஊதியூரில் உள்ள சமத்துவபுரத்தில், குண்டடம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குண்டடம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற. கிராமசபை கூட்டத்தில் அதிமுக வை சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம் என அறைகூவல் விடுத்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பதாகையில் அதிமுகவை நிராகரிப்போம் என உறுதிமொழி ஏற்று கையொப்பமிட்டனர். மேலும் கூட்டத்தில் பேசிய திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ், திரளாக கூடி இருந்த அருந்ததிய மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் இந்தக் கோரிக்கைகளை சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இணைக்கவும் திமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன், உடனடியாக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்நிகழ்ச்சி பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பெரியசாமி கிருஷ்ணசாமி கோபால், கிருஷ்ணன், செல்வராஜ், ஆதி தமிழர் பேரவை தாராபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் பொன் ராஜேந்திரன்.காங்கேயம் ஒன்றிய செயலாளர்!ர.ஜெயந்தி மாவட்ட அமைப்புச் செயலாளர் கவிதா மாவட்ட மகளிரணி செயலாளர் சாவித்திரி குண்டடம் ஒன்றியம் செயலாளர் ராஜசேகர் குண்டடம் ஒன்றியம் செயலாளர் சுகிராஜ் அமைப்புச் செயலாளர் விஜயகுமார் குண்டடம் ஒன்றிய தலைவர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசன் குண்டடம் ஒன்றியம் நிதி செயலாளர் செந்தில் அவைத்தலைவர் அர்ஜுன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்













