SRF தொழிற்சாலையில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம்

0
294

சென்னை மணலியில் உள்ள SRF தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மணலியில் செயல்பட்டு வரும் SRF தொழிற்சாலையில் மீன் வலைகள் மற்றும் டயர்களில் வரும் நூல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உற்பத்தியில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி ஒரு துறையை நிர்வாகம் மூடி விட்டதாகவும் இதனால் அங்கு பணிபுரிந்த 125 தொழிலாளர்களுக்கு கட்டாய பணிமாற்றம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தொழிலாளர் பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை விதித்தும் அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது

ஆனால் நிர்வாகம் மூன்று மாதமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமலும் வேலை கொடுக்காமல் இருந்ததால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஜனவரி மாதம் 58 வயது நிறைவுபெற்று ஓய்வுபெறும் தொழிலாளர்களை கூட பாட்னா ஜாம்ஷெட்பூர் போன்ற வெளி மாநிலங்களில் அனுப்பப் படுவதாகவும் குற்றம்சாட்டி

SRF நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here