மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஏர் கலப்பை பேரணி;

0
420

வட சென்னை காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் வண்ணாரப்பேட்டை பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து ஏர்கலப்பை பேரணி நடத்தினர் ராயபுரம் ஆர்கே நகர் பெரம்பூர் திருவிக நகர் உள்ளிட்ட தொகுதிகளை சார்ந்த பெண்கள் உட்பட கட்சி தொண்டர்களும் 300க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு விவசாயத்திற்கு பயன்படுத்த கூடிய ஏர் கலப்பையை தாங்கியவாறு பேரணியாக வந்தனர்

பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளையும் தாண்டி விவசாயிகளுக்கு எதிரான விவசாய சட்ட மசோதாவை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார் பேரணிக்கு தடை செய்யப்பட்டிருந்ததால் தடையை மீறி வண்ணாரப்பேட்டை எம் சி ரோட்டில் அமைந்திருக்கும் காமராஜர் சிலையில் இருந்து பேரணியாக நடக்க முயன்றனர் அப்பொழுது காவல்துறையினர் பேரணியாக வர இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
கைது செய்யும் முன் தடையையும் மீறி பேரணியாக செல்ல முயன்றதால் காவல்துறைக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் பொன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் ஏற்பாட்டில் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here