சென்னை, ராயபுரம் கப்பல் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக காசிமேடு கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். இந்நிலையில் ஐந்து சிறுவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி 5 பேரும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்து 19 வயது இளைஞரை மட்டும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் மீதமுள்ள 13, 14 வயது உள்ள 4 பேரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும் பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டு வந்தனர். காசிமேடு போலீசார் துணையுடன் ஈடுபட்டு வந்த நிலையில் இரவு நேரம் என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்து பின்பு மீண்டும் தேடுதல் பணி நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் குளிக்க வந்தவர்கள் கடல் அலையில் சிக்கி மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது














