மருத்துவம மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடைக்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயகுமார்;

0
442

இந்த ஆண்டே மருத்துவம மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடைக்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று, துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடிகளுக்கான ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். அதேபோல், 15 விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசியினை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு மானிய விலையில் செயற்கைகோள் கைப்பேசி வழங்கப்பட்டது. இது போல் தமிழகம் முழிவதிலும் உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும் என கூறினார். திருவொற்றியூரில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய துறை காட்டப்படும் எனவும் இதனால், 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என கூறினார்.

ராமநாதபுரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது என கூறினார். இது குறித்து மத்திய அரசின் கவனத்கிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அகில இந்திய மருத்துவ படிப்பில் தமிழக ஒபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்தாண்டே கிடைப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக கூறினார். இந்த சட்ட மசோதா அமலாக்க தொடர்சியாக ஆளுனருக்கு அழுத்தம் கொடுப்பதும் தங்கள் அரசு தான் என கூறிய அவர், இந்த விவகாரத்தில் நல்ல முடிவு வரவுள்ள நிலையில் அது தொடர்பாக போராட்டம் நடத்தி, தங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பெயரை திமுக தலைவர் ஸ்டாலின் தடுப்பதாக குற்றம் சாட்டினார். எங்களுக்கு தமிழகத்தின் நலன் தான் முக்கியம் அதிகாரம் முக்கியமல்ல என கூறிய அவர்
திமுகவுக்கு அதிகாரம் தான் முக்கியம் என விமர்சித்தார்.
நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் இனப்படுகொலையாக காரணமாக இருந்தவர்களுக்கு துணை போனவர்கள் திமுக எனவும் அவர் விமர்சித்தார். குஷ்பு கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட கூடாது என்பதால் குஷ்பு கைது செய்யப்பட்டார் என விளக்கமளித்தார்.
திருமாவளவனை கைது செய்ய தமிழக அரசு அஸப்படுவதாக குஷ்பு பதிவிட்ட ட்வீட் குறித்து பேசிய அவர், யாருக்கும் பயப்படும் அரசு அதிமுக அரசு இல்லை என கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here