லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது;

0
272

மதுரை ரோட்டில் உள்ள வள்ளுவர் நகர், ஜலால் குதிரி தெரு, சத்திரம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக மேலசிந்தாமணி பழைய கரூர் ரோடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 47), மதுரை ரோடு வள்ளுவர்நகரை சேர்ந்த அப்துல் வகாப் (41), தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜா (57) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட 29 லாட்டரி சீட்டு துண்டுகள் மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here