திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது
கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது175 பரிசோதனை மையங்களில் தினசரி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன இதுவரை 64 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன 5 லட்சத்து 30 ஆயிரத்து தொள்ளாயிரத்து 8 பேருக்கு தொற்று இருந்தது அதில் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர் மாண்புமிகு தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தன்னார்வலர்கள் குறைக்கப்பட்டுள்ளனர் தேவையான இடத்தில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் அதிமுக ஒரு மாபெரும் இயக்கம் ஒன்றை கோடி தொண்டர்களை கொண்டுள்ளது தற்போது தான் நாங்கள் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி உள்ளோம் அதனால் எங்களுக்குள் கருத்துக்கள் விவாதங்கள் நடைபெறுகின்றன என்ன கூட்டத்தில் பேசினோம் என்பது எங்களுக்கு தான் தெரியும் ராணுவ கட்டுப்பாடோடு அதிமுக உள்ளது அண்ணன் ஓபிஎஸ் இபிஎஸ் ராமர் லட்சுமணர் போல் ஒற்றுமையாக உள்ளனர் ஒருசிலர் பரபரப்புக்காக அதிமுகவில் பிரச்சனை உள்ளது போல் கூறுகின்றனர் அப்படி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை முதல்வர் யார் என்பது குறித்து பேசுவதற்கு தடை உள்ளது தடையை மீறி நாங்கள் யாரும் அது குறித்து பேச மாட்டோம அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது அம்மாவின் ஆட்சி தான் அடுத்து வர வேண்டுமென பொதுமக்களும் விரும்புகின்றார்கள் கூட்டணிக் கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள் வெளியே கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது அந்த விதத்தில் அவர்கள் தெரிவிக்கிறார்கள் எங்களது எதிரிகள் எங்களது கூட்டணியை பார்த்து திக்குமுக்காடி போய் உள்ளனர் எதிர்க்கட்சிகள் பொது நாகரிகம் கருதி பேச பேச வேண்டும் எங்களால் உரிய பதில்களை அளிக்க முடியும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் பேசுவது மியூட் செய்யப்படுகிறது நாங்கள் பேசினால் முழுவதையும் மியூட் செய்யும் அளவுக்கு எங்களால் பேச முடியும் ஆனால் நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் பேச மாட்டோம் எதிர்க்கட்சித் தலைவர் தனது மகனுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் தான் ஓரு இளவரசர் போல் நினைத்துக்கொண்டு பேசக்கூடாது இது எனது ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன் என கூறினார் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாதவரம் வி மூர்த்தி முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் பி ராஜேந்திரன் கே.கிருஷ்ணன் சிவில் முருகேசன் அஜாக்ஸ் பரமசிவம் தனரமேஷ் சிறப்பு அதிகாரி வர்கீஸ் காவல்துறை அதிகாரி ஆதிமூலம் மண்டல அதிகாரி தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
















