ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் 2021இல் அதிமுக பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கி வைத்தப் பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பெயர் அளவிற்கு தான் பட்டியல் இனத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கட்சி பதவிகளில் பட்டியலினத்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்குவதில்லை என குற்றம்சாட்டினார்.
திமுகவில் குழப்பங்கள் இருப்பதால் தான் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்தி அதையும் பெருமைபடுத்திக் கொள்வதாக கூறினார்.
திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெறாமல் இருந்திருந்தால் கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மேலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் அதிமுகவின் அடித்தளம் வலுவாக உள்ளதால் 2021இல் அதிமுக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தார்.
















