சென்னை வண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்து காத்தாடி விற்ற 3 பேர் கைது;

0
480

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து சிலர் மாஞ்சா நூல் காத்தாடி விற்பனை செய்து வருவதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அப்பகுதி முழுவதும் நடத்திய தீவிர சோதனையில் வண்ணாரப்பேட்டை முத்தையா மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் காத்தாடி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு சோதனை செய்த போலீசார் அங்கிருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 140 காத்தாடிகள் மற்றும் 2 லொட்டாய்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள. அதே பகுதியை சேர்ந்த முகமது நிஜாமுதீன்(62), இர்சாத்(40), சர்தார்(42) என தெரியவந்தது. மேலும் அவர்கள் அப்பகுதியில் காத்தாடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here