வேலூரில் தினசரி அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் வேலூர் மாநகராட்சி சார்பில் காட்பாடி தொன்போஸ்கோ பள்ளியில் கொரோனா வைரஸ்நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. டான்போஸ்கோ பள்ளியில் தற்காலிகமாக நடக்கும் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் , வியாபாரிகள் மற்றும் காட்பாடி காந்திநகர் பகுதிவாழ் மக்கள் வேலூர் மாநகராட்சி நடத்திய இந்த முகாமில் கலந்துகொண்டு கொரோனா பாதிப்பு உள்ளதா என அறிய முன்வந்தனர் காட்பாடியில் நடந்த இந்த முகாமை மாநகராட்சி அதிகாரி பாலமுருகன் முன்னின்று நடத்தினார், முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவச முக கவசம் வழங்கப்பட்டது. இதேபோல் வேலூர் மாந்நகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் கொரோனாநோய் கண்டறியும் முகாம் முகாம் நடைபெற்றது.















