சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கைப்பையை பறித்துச் சென்ற இருவர் கைது;

0
496

கடந்த 8ம் தேதி அன்று பழையவண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெரு வழியாக தேவி 33 என்ற பெண் தனது வீட்டிற்கு நடந்து சென்ற போது, அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தேவியின் கைப்பையை பறித்து சென்றுள்ளனர்

தனது ஹான் பேக்கில் இருந்த ரூ2000, ஆதார் கார்டு ,பான் கார்டு, மற்றும் ATM card , ஆகியவை இருந்ததாகவும், இதை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், H3 தண்டையார் பேட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை ஆய்வு செய்து , அதில் தெரிந்த இரு சக்கர வாகனத்தில் பதிவு எண்ணை வைத்து கொருக்குப்பேட்டை சேர்ந்த செல்வகுமார் மற்றும் சங்கர் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தின்போது
பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து விசாரித்து
வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here